U/A தரச்சான்றிதழ் பெற்ற “அகிலன்”

 U/A தரச்சான்றிதழ் பெற்ற “அகிலன்”

ஜெயம் ரவி நடித்து வெளிவந்த பூலோகம் படத்தினை இயக்கியவர் இயக்குனர் கல்யாண்.

மீண்டும் ஜெயம் ரவியை வைத்து தற்போது அகிலன் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். ஹார்பரில் நடக்கும் கடத்தல் சம்பவங்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.

நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

படம் சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடியதாக தயார் செய்யப்பட்டுள்ளது.

வரும் 10-ஆம் தேதி இப்படம் திரை விருந்தாக வெளிவர இருக்கிறது.

 

Related post