மீண்டும் ஐஸ்வர்யா ராயோடு விக்ரம்!?

 மீண்டும் ஐஸ்வர்யா ராயோடு விக்ரம்!?

விக்ரம் – ஐஸ்வர்யா ராய் ஜோடி எப்போதும் ரசிகர்களிடையே ஈர்ப்பைப் பெற தவறியதில்லை. ராவணன் படத்தைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் ஜோடி சேர்ந்தது. இந்த இரு படத்தினையும் இயக்கியவர் மணிரத்னம் தான்.

இந்நிலையில், மீண்டும் மணிரத்னம் இந்த ஜோடியை திரைக்கு கொண்டு வர இருக்கிறாராம். ஆம், கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கி முடித்ததும் மீண்டும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறாராம் மணிரத்னம்.

அப்படத்தின் கதையை துவக்கி விட்டதாகவும், கமல் படத்தை முடித்த கையோடு அப்படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.

 

Related post