பெண் பணியாளர் கைது; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கர் விவகாரம்;

 பெண் பணியாளர் கைது; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கர் விவகாரம்;

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த வைர செட்கள், கோயில் நகைகளில் உள்ள வெட்டப்படாத வைரங்கள், பழங்கால தங்கத் துண்டுகள், நவரத்தினம் செட்கள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வெட்டப்படாத வைரம்- இரண்டு கழுத்து துண்டுகள் பொருந்திய காதணிகள், ஆரம் நெக்லஸ் மற்றும் சுமார் 60 சவரன் வளையல்கள் காணாமல் போயிருப்பதாக அந்த புகாரில் ஐஸ்வர்யா கூறியிருந்தது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் நிலையில். போலீசார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், அவரது வீட்டில் பணியாற்றி வந்த பெண் பணியாளர் ஈஸ்வரியின் வங்கி கணக்கில் பரிவர்த்தனை நடத்தப்பட்டிருப்பதால் அது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் பெண் பணியாளர் ஈஸ்வரி மற்றும் அவரது கணவரை விசாரித்தனர்.

இந்த விசாரணையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியிருப்பதும் வாங்கிய கடனை இரண்டே வருடங்களில் திருப்பி செலுத்தியிருப்பதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பெண் பணியாளர் ஈஸ்வரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈஸ்வரி எப்போது நகையை கொள்ளையடித்தார்? யாரிடம் விற்றார்? நகைகளை வாங்கியவர்கள் யார் என்று பல கேள்விகளுடன் போலீஸ் விசாரித்து வருகிறதாம்.

மேலும், ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 120க்கும் மேற்பட்டோர் பணி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related post