ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் தலைப்பு.?

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் தலைப்பு.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர்.

இந்த படங்களைத் தொடர்ந்து இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்த ஐஸ்வர்யா மீண்டும் அப்பக்கம் திரும்பியுள்ளார்.

ஆம், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறார் ஐஸ்வர்யா. தனது அடுத்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க இருக்கிறார்.

இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பினை துவங்கவிருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும், இப்படத்தில் சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ”லால் சலாம்” என்று டைட்டில் வைத்துள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post