அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து இது தான்;

 அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து இது தான்;

பொங்கல் பண்டிகைக்கு வெளியான அஜித்தின் “துணிவு” திரைப்படம் பெரும் வசூலை குவித்து வெற்றிப்படமாக அமைந்தது.

அதன் பின், AK 62 படத்தை பற்றிய பேச்சு ஒரு விவாத பொருளாகவே மாறியது. அதற்கு காரணம், AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி பின் அந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது. அதன் உண்மை காரணம் என்னவென்று தெரியாமல், பலரும் பல கதைகளை அடுக்கிவந்தனர்.

மேலும், AK 62 பட அலை ஓய்ந்து இருந்தது. அஜித் நடிப்பிலிருந்து சில ஆண்டு ஓய்வெடுத்து அவரின் பொழுதுபோக்கான பைக் ரைட் உலகம் முழுவதும் செல்லவுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்த நிலையில்.

அதை, உறுதி செய்யும் விதத்தில் தற்போது அஜித் நேபாலில் தனது பைக் ரைடை என்ஜாய் செய்து வருகிறார். இதனால் சோகத்திலிருந்த அவரின் ரசிகர்களுக்கு தற்போது விருந்து தர அஜித் முடிவு செய்துள்ளாராம்.

மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று, AK 62 படத்தின் அறிவிப்பும். அப்படத்தின் டைட்டிலையும் வெளியிட வேண்டுமென படக்குழுவிடம் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு மே 1 ஆம் தேதிக்கு காத்து கிடக்கின்றனர்.

 

Related post