நடுக்கடலில் போஸ்டர் வைத்த அஜித் ரசிகர்கள்

 நடுக்கடலில் போஸ்டர் வைத்த அஜித் ரசிகர்கள்

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு. நாளைய மறுதினம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டமாக வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

யூ டியூப் தளத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்தாலும், தொடர்ந்து அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ரசிகர்கள் துணிவு படத்தினை ப்ரொமோட் செய்யும் பணிகளில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி அஜித் ரசிகர்கள் சிலர், துணிவு படத்தினை போஸ்டரை நடுக்கடலில் கொண்டு சென்று வைத்துள்ளனர். இது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது..

 

Related post