விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் இயக்குனர் இவரா.?

 விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் இயக்குனர் இவரா.?

நடிகர் அஜித்குமார் தற்போது ஹச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் 63வது படத்தினை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வரும் சூழலில், ஏ ஆர் முருகதாஸிடம் அஜித் ஒரு கதையை ஓகே செய்து வைத்திருப்பதாகவும் அந்த கதையில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் – ஏ ஆர் முருகதாஸ் – அனிருத் மூவரின் கூட்டணியில் ஏகே 63 உருவானால் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கும் படமாக நிச்சயமாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

 

Related post