துணிவு ப்ரொமோஷன் அஜித் பங்கேற்பு.? வெளியான புதிய தகவல்!!

 துணிவு ப்ரொமோஷன் அஜித் பங்கேற்பு.? வெளியான புதிய தகவல்!!

அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்க மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் தான் துணிவு.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்பார் என்ற செய்தி வெளியாகிவந்த நிலையில், அது குறித்து குட்டி அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஒரு நல்ல திரைப்படமே அந்த திரைப்படத்தின் சிறந்த ப்ரொமோஷன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் மூலம் அவர் துணிவு ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

 

Related post