மீண்டும் அந்த இயக்குனரா.? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

 மீண்டும் அந்த இயக்குனரா.? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் தான் துணிவு. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்க வர இருக்கிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்குமார். இதனை ஒரே கட்டமாக படமாக்கி முடிக்க அஜித் முடிவெடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 7 மாதங்கள் முழு ஓய்வில் இருக்கமுடிவெடுத்துள்ள அஜித்குமார், அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய சிவா தான் அஜித்தின் 63வது படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேதாளம் மற்றும் விஸ்வாசம் கொடுத்த தோல்வியால் விரக்தியில் இருந்து வரும் ரசிகர்கள் இனி அவருடன் இணையமாட்டார் என்றெண்ணி இருந்தனர். இந்நிலையில், மீண்டும் அஜித் சிவாவோடு இணையவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Related post