”ஏகே 61” படத்தில் இணைந்த முக்கிய நடிகர்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
அஜித்குமார் நடிக்க ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஏகே 61”. வலிமை பெரிதளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாததால், அஜித்தின் அடுத்தபடமான ஏகே 61 படத்தினை பெரிதளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், சென்னை அண்ணா சாலை போன்ற ஒரு செட் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
அசுரன் படத்தில் நடித்த மஞ்சுவாரியர் இப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை அவரே அறிவித்துள்ளார்.
நல்ல குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்கிக் கொண்டு வரும் சமுத்திரக்கனி இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.