ஹோட்டல் நடத்தும் ஓனராக அஜித்; ”ஏகே 62” அப்டேட்!
அஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “”ஏகே 61” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முழுவீச்சில் அதன் வேலைகள் நடந்து வருகிறது.
இப்படத்தினைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்படத்தில் அஜித் தமிழகம் முழுக்க ஓட்டல் நடத்தும் உரிமையாளராக வருகிறாராம்.
சமுதாயத்தில் ஒரு இளைஞன் எவ்வாறு உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறும் விதமாக இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை லைகா மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது.