AK62 படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா?ஹீரோயின் யார்?

 AK62 படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா?ஹீரோயின் யார்?

லைகா நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “AK62”. கடந்த டிசம்பர் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹீரோயின் கிடைக்காத காரணத்தால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை சாய் பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட்:

இப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கிறதாம். அந்த வகையில் இப்படத்திற்காக லைக்கா நிறுவனம் 200 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கி இருக்கிறது. அதிலும் அஜித்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை வைத்து பார்க்கும் பொழுது அஜித்தின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படமும் இதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படி ஆரம்பத்திலேயே பரப்பரப்பை கிளப்பி இருக்கும் இந்த படத்திற்கான ப்ரீ சேல் வியாபாரமும் தற்போது ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் துணிவு திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ஏகே 62 இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கிராமம் மற்றும் விவசாயம் சார்ந்த ஒரு படமாக “AK62” படம் இருக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில். கிராமத்து படத்திற்கு 200 கோடி பஜெட் தேவையா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பிவருகின்றனர்.

 

Related post