ஏகே 62”; மீண்டும் அஜித்தோடு இணைந்த அனிருத்!

 ஏகே 62”; மீண்டும் அஜித்தோடு இணைந்த அனிருத்!

அஜித் நடிக்க லைகா தயாரிப்பில் உருவாக இருக்கிறது “ஏகே 62”. அஜித்குமாரின் 62வது படமான இதை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து விலகியதாகவும் இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இபப்டத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அஜித்தின் பேவரைட் ஒளிப்பதிவாளரான நிரவ் ஷா இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றவிருக்கிறார்.

வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அனிருத் அஜித்தோடு “ஏகே 62”வில் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post