ஒருவழியாக “அகிலன்” ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

 ஒருவழியாக “அகிலன்” ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அகிலன்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் கவலையில் இருந்தனர் இவரது ரசிகர்கள். பொன்னியின் செல்வன் ரிலீஸாகி 9 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அகிலன் திரைப்படம் ரெடியாகி பல மாதங்கள் ஆகிவிட்டதாலும், எப்போதுதான் இந்த படத்தை ரிலீஸ் செய்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே அகிலன் படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை கேட்டு உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

அடுத்த மாதம் மார்ச் 10 ஆம் தேதி படத்தினை ரிலீஸ் செய்வதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

 

Related post