நடிகர் லிட்டில் ஜான் குடும்பத்திற்கு உதவிய நடிகர் தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தர்ராஜன்
2 நாட்களுக்கு முன்பு இறந்த நடிகர் லிட்டில் ஜான் குடும்பத்திற்கு உதவிய நடிகர் தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தர்ராஜன்.
சத்தியராஜ் நடித்த வெங்காயம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தற்போது வரை மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் படைவீடு அல்லி நாயக்கன்பாளையம் என்ற ஊரில் வசித்து வந்த தனசேகரன் என்ற லிட்டில் ஜான் வயது 43 இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் இறந்துவிட்டார். இதை அறிந்த ஊடக நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று செய்தி சேகரித்து தொலைக்காட்சிகளில் வெளியிட்டிருந்தார்கள். வெங்காயம் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் சௌந்தரராஜன் ஊடகங்கள் வாயிலாக லிட்டில் ஜான் இறந்த செய்தியை பார்த்திருக்கிறார் பணிச்சுமை காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை இருப்பினும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் சக கலைஞனின் குடும்பத்திற்கு உதவ நினைத்து செய்தி வெளியிட்டிருந்த செய்தியாளர்களை தொடர்புகொண்டு தான் லிட்டில் ஜான் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று கேட்டு தனது அலுவலக பணியாளர்களை அனுப்பி ரூபாய் 50 ஆயிரத்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொடுக்க வைத்துள்ளார்.
லிட்டில் ஜான் மிகப் பெரிய நடிகனாக இல்லாதபோதும் ஒரு கலைஞனை மதிக்கும் விதமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் இதுபோல் நற்செயல் நடந்துள்ளது. சக கலைஞனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அலெக்சாண்டர் சௌந்தரராஜன் அவரது செயல் பாராட்டுதலுக்குரியது.