அல்லு அர்ஜுனின் ”புஷ்பா 2” அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!!

 அல்லு அர்ஜுனின் ”புஷ்பா 2” அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அல்லு அர்ஜுன் நடிக்க சுகுமார் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் “புஷ்பா”. பாடல் முதல் படம் வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம்.

சுமார் 350 கோடி ரூபாய் வரையில் வசூலை வாரிக் குவித்தது இப்படம். இப்படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடலே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முயற்சியில் தனது அடுத்தகட்ட பணிகளை துவக்கிவிட்டாராம் இயக்குனர்.

சமீபத்தில் வெளியான கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் 1000 கோடிக்கு மேல் வசூலானதை அடுத்து புஷ்பா படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம் இயக்குனர்.

இதன் படப்பிடிப்பினை வரும் ஆகஸ்ட் மாதம் துவக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகள் முதல் பாகம் உருவானபோதே படமாக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது.

Related post