சல்மான் கான் நடிக்கும் ”டைகர் 3”; வெளியீட்டு தேதி அறிவிப்பு!

 சல்மான் கான் நடிக்கும் ”டைகர் 3”; வெளியீட்டு தேதி அறிவிப்பு!

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டைகர் 3 படத்தில் சல்மான் கான், கத்ரினா கைப் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை மனீஷ் வர்மா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வேலைகள் முடிப்பதற்கு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், ரிலீஸ் தேதி தள்ளி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post