அமீரின் ஆதரவு கரங்களால் வெளியிடப்படும் “மாயவலை” டீசர்
இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர் நடித்திருக்கும் படம் தான் “மாயவலை”.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் கருத்துக்கு எதிராகவும் அமீரின் பக்கம் நின்ற சமுத்திரக்கனி, சசிகுமார், கரு பழனியப்பன், வெற்றிமாறன், சிநேகன், சேரன் உள்ளிட்ட நட்சத்திரங்களால் மாயவலை டீசர் வெளியிடப்படும் என அமீர் அறிவித்துள்ளார்.
அமீர் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.