நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா; ரசிகர்கள் பிரார்த்தனை!

 நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா; ரசிகர்கள் பிரார்த்தனை!

இந்திய சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு, தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தன்னுடன் நெருங்கி பழகியவர்கள் தயவுசெய்து டெஸ்ட் செய்து கொள்ளுமாறும் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

80 வயதுடைய அமிதாப் பச்சன், எப்போதும் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை மட்டுமல்லாது பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பலரும் அமிதாப் பச்சன் மீண்டும் வர வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

 

Spread the love

Related post