ஆனந்தபுரத்து வீடு பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி!

 ஆனந்தபுரத்து வீடு பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி!

திகில் மற்றும் திரில்லர் தொடராக வெளிவந்த மர்மதேசம் தொடரை இயக்கியவர் தான் இயக்குனர் நாகா. ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட தொடர்களையும் இவர் இயக்கியிருக்கிறார்.

சாயா சிங் நடிப்பில் வெளியான ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார்.

தற்போது ஓடிடி தளத்துக்கு ஒரு வெப் தொடரை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related post