அந்தகன் விமர்சனம் – 3/5

 அந்தகன் விமர்சனம் – 3/5

இயக்கம் : தியாகராஜன்

நடிகர்கள்: பிரசாந்த், சமுத்திரக்கனி, சிமரன், யோகிபாபு, ப்ரியா ஆனந்த், ஊர்வசி, கே எஸ் ரவிக்குமார், வினிதா,

ஒளிப்பதிவு: ரவி யாதவ்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: சாந்தி தியாகராஜன்

கதைப்படி,

நாயகன் பிரசாந்த் கண் தெரியாதவர் போல் நடித்து வருகிறார். இவருக்கு பியானோ வாசிப்பதில் பேரார்வம். கண் தெரியாதவர் போல் நடித்தால் மட்டுமே பியானோ வாசிப்பதை அனைவரும் விரும்பி கேட்பதாக கூறுகிறார். அதனாலே தான் கண் தெரியாதவர் போல் நடிப்பதாக கூறுகிறார்.

இச்சமயத்தில், ப்ரியா ஆனந்த் உடன் நட்பு ஏற்படுகிறது பிரசாந்திற்கு. இருவருக்கும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்கின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, பிரபல நடிகராக வரும் கார்த்திக் பிரசாந்தின் பியானோ வாசிப்பை கேட்டு பிரம்மிக்கிறார்.

தனது திருமண நாளில் தனது இரண்டாவது மனைவியான சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்கு வரும்படி பிரசாந்திற்கு அழைப்பு விடுக்கிறார்.,

அடுத்தநாள் பிரசாந்த் கார்த்திக் வீட்டிற்குச் செல்ல, வீட்டிற்குள் ஒரு சம்பவம் நடக்கிறது. அச்சம்பவத்தில் சமுத்திரக்கனியும் தொடர்புடையவராக இருக்கிறார்.

அதன்பிறகு பிரசாந்திற்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் பிரசாந்த் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் நாயகனாக பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகரான பிரசாந்த், மீண்டும் அதே எனர்ஜியோடும் அதே நடிப்போடும் மீண்டும் இப்படத்தில் களம் கண்டிருக்கிறார்.

கண் தெரியாதவர் போல் நடிக்கும் காட்சிகளில் எல்லாம் அவர் நடிப்பதாகவே தெரியாத அளவிற்கு மிகவும் தத்ரூபமான நடிப்பைக் கொடுத்திருந்தார்.

ப்ரியா ஆனந்த் உடனான காதல் காட்சி, சிம்ரனுடன் மோதும் காட்சி என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருந்தார் பிரசாந்த்.

மிரட்டலான தோற்றத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார் நடிகை சிம்ரன். படம் முழுக்க பயணிக்கும்படியான கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்து அதை முழுமையாக்கியிருக்கிறார்.

சமுத்திரக்கனி, யோகிபாபு, ஊர்வசி, வினிதா என படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் மிகவும் இயல்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தனர்.

எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம் மிகவும் நேர்த்தியான ஒரு திரைக்கதையை அமைத்து அதை வெற்றிகரமாக இயக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன்.

அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பலம். யாரும் யூகிக்காதபடி கதை நகர்வதால், அடுத்து என்ன நடக்கும் என சீட்டின் நுனியில் அமர வைக்கும்படியான படமாக செல்கிறது இந்த அந்தகன்.

இளையராஜாவின் பாடல்கள் ஆங்காங்கே பின்னணி இசையாக வருவது கேட்பதற்கே காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகமாக இருக்கிறது.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

அந்தகன் – வெற்றிக் கண்

Related post