மாஸ்டர் படத்திற்கு பிறகு “விஜய்” ஃபேன் ஆகிவிட்டேன் – ஆண்ட்ரியா!

 மாஸ்டர் படத்திற்கு பிறகு “விஜய்” ஃபேன் ஆகிவிட்டேன் – ஆண்ட்ரியா!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க சென்ற வருடம் வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”.

இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார் ஆண்ட்ரியா. சில தினங்களுக்கு முன் இவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மாஸ்டர் படத்திற்கு முன் விஜய்யோட எந்த படங்களையும் அவ்வளவாக பார்த்ததில்லை அதனால் எனக்கு அவ்வளவாக அவரைப் பற்றி எதுவும் தெரியாது.

ஆனால் இந்த படத்தில் அவருடன் நடித்த பிறகு நானே விஜய் ஃபேனாக மாறிவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியது ரொம்ப எளிமையாக இருந்தது. அவர் செட்டில் இருக்கும் பொழுது ஒரு ஸ்டார் மாதிரி நடந்து இருக்க மாட்டார். மிகவும் எளிமையாக இருப்பார்.” என்று விஜய் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

 

Related post