ஓடிடி படங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

 ஓடிடி படங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசும்போது, “ஓடிடி தளங்களில் படைப்பாற்றல் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. முறைகேடான, ஆபாசமான உள்ளடக்கம் அதிகரித்து வருவது அரசின் கவனத்தில் உள்ளது. புகார்கள் அரசின் பார்வைக்கு வரும்போது என்னென்ன விதிகள் உள்ளதோ, அதன் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓடிடி தளங்களுக்கு படைப்பாற்றலுக்கான சுதந்திரம் அளிக்கப்பட்டதே தவிர, துஷ்பிரயோகம் செய்வதற்காக அல்ல என்றார். 90 சதவீத புகார்கள் சொந்த மாற்றங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும், சங்கங்கள் அளவிலும் பெரும்பாலான புகார்கள் தீர்க்கப்படுவதாகவும் கூறினார். அரசு மட்டத்திற்கு வரும்போது, என்னென்ன விதிகள் உள்ளதோ, அந்த துறை ரீதியான கமிட்டி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அனுராக் தெரிவித்தார். மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால், அதுகுறித்து தீவிரமாக ஆலோசிப்போம் என்ற அனுராக் தாகூர், இந்த விவகாரத்தில் அரசு பின்வாங்காது.” என்றும் கூறினார்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page