மீண்டும் பிரபாஸூக்கு ஜோடியாகும் அனுஷ்கா.!?
தெலுங்கு திரையுலகில் காதல் ஜோடியாக பறந்த வந்தவர்கள் தான் பிரபாஸூம் அனுஷ்காவும். பாகுபலி படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்ற தகவல் வெளியானது. அதன்பிறகு, அந்த தகவல் உண்மையில்லாமல் போனது.
பாகுபலி படத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் இருந்தனர். இந்நிலையில்,
இயக்குனர் மாருதி இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது செய்திகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.