ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு!?

சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க ஆயத்தமானார் சிம்பு.
ஆனால், சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிம்புவை சந்தித்து கதை ஒன்றினைக் கூறியிருக்கிறார்.
அந்த கதை சிலம்பரசனுக்கு மிகவும் பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் சிம்பு. இது ஒரு சூப்பர் ஹீரோ கதை என்பதால் உடனே படப்பிடிப்பிற்கு போலாம் என்று சொல்லிவிட்டாராம்.
அதனால், கொரோனாகுமார் படத்தையும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தையும் ஒரே சமயத்தில் நடிக்க திட்டம் தீட்டியிருக்கிறார் சிம்பு.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது,