100 மில்லியன் தொட்ட ”அரபிக்குத்து” பாடல்; இணையத்தை கலக்கும் தளபதி ரசிகர்கள்!

 100 மில்லியன் தொட்ட ”அரபிக்குத்து” பாடல்; இணையத்தை கலக்கும் தளபதி ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பீஸ்ட்”. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் வெளியான நாள் முதலே பெரும் வைரலாக ஓடிக் கொண்டிருந்தது. இதன் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

இப்பாடல், யூ டியூப் தளத்தில் நேற்றுடன் 100 மில்லியன் பார்வைகளை எட்டியது. இதனை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் ரசிகர்கள் #ArabicKuthuHits100Mviews என்ற டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page