அரியவன் திரைவிமர்சனம்

 அரியவன் திரைவிமர்சனம்

இஷான், ப்ரணாலி கோகரே, டேனியல் பாலாஜி, சத்யன், சுப்பிரமணி, நிஷ்மா மற்றும் பலர் நடிப்பில் MGP மாஸ் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் “அரியவன்”. மித்ரன் ஆர் ஜவகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கிரிநந்த், வேத் ஷங்கர், ஜேம்ஸ் வசந்தன் என மூன்று இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

எதை பேசுகிறது இப்படம்?

பெண்களுக்கு எதிராக நாடாகும் பாலியல் குற்றங்களையும், தவறான நபரை காதலிப்பதால் மூலம் பெண்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதையும் அதற்கான தீர்வையும் மக்களுக்கு எளிதாக புரியும் விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இப்படம்.

கதைப்படி,

பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை பாலியல் தொழிலாளர்களாகி பணம் சம்பாதிப்பது தான் அவரின் தொழில். அவர் பிரபல தாதாவும் கூட. அவர் செய்யும் தவறுகள் ஒருபக்கம் நமக்கு காண்பிக்கப்பட்ட.

மறுபக்கம், இஷான் மற்றும் ப்ராணலி இருவரும் காதலர்கள். திடீரென ஒரு நாள், ப்ராணலியின் தோழியான நிஷ்மா தற்கொலைக்கு முயற்சி செய்ய. ப்ராணலி தடுத்துவிடுகிறார். அப்போது, அவரின் இந்த முடிவுக்கு காரணம் அவரை காதலிப்பதாக சொல்லி ஒருவர் அவரை ஏமாற்றி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை ப்ராணலியிடம் கூறுகிறார்.

அதன் பின் அந்த வீடியோவை டெலீட் செய்ய வேண்டும் என ப்ராணலி அவரிடம் கூற சண்டை வருகிறது. அந்த சண்டையில் எதிர்பாராத விதமாக அவரின் கையை துண்டித்துவிடுகிறார் இஷான்.

ஆனால், அவருக்கு தெரியாது இது ஒரு பெரிய நெட்வர்க் என்று. கை துண்டிக்க பட்ட நபர் யாரென்று பார்த்தால் அவர் டேனியல் பாலாஜியின் தம்பி. எனவே, தனது தம்பியின் கையை வெட்டியா இஷானை கொலை செய்ய வேண்டுமென வெறியோடு கிளம்புகிறார் டேனியல் பாலாஜி.

டேனியல் பாலாஜியிடம் இருந்த வீடியோ அதரங்களை கைப்பற்றினாரா இஷான்? பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருந்த எங்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? டேனியல் பாலாஜி மற்றும் அவரின் கூட்டம் என்ன ஆனது என்பது படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதி.

பலத்த குரல், மிடுக்கான உடலமைப்பு என ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் இஷான். ஜீவா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார். அவர் தனது முகத்தை கவனித்துக்கொள்வதில் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

இவர் செய்த சண்டைக்காட்சிகள் மக்களை கவரும் வகையில் இருக்கிறது. அதிகப்படியாக இவரின் கால்களை பயன்படுத்தி மட்டுமே சண்டையிட்டு நம்மை ரசிக்க செய்திருக்கிறார். அதற்கு காரணம் அவரின் உயரம். பெண்களுக்கு ஆறுதலாகவும், சமூக பொறுப்புடனும் இவர் பேசும் வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது.

கதாநாயகியான ப்ராணலி எமோஷன் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். காட்சிகள், ரோமன்ஸ் காட்சிகள் என இரண்டிலும் கச்சிதமாக நடித்துள்ளார்.

நிஷ்மா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் காமெடி நடிகர் சத்யனை திரையில் பார்த்தது மகிழ்ச்சி.

முந்தைய படங்களை போல் இல்லை இப்படத்தின் டேனியல் பாலாஜியின் நடிப்பு. அவர் கூடுதல் கவனத்துடன் நடித்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம்.

எஸ்.யூ.மாரிசெல்வன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். சமூக பொறுப்புடனும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைத்தும் இக்கதையை அமைத்ததற்கு பாராட்டுக்கள்.

மித்ரன் ஆர் ஜவகர் இயக்கம் நன்று. 108 நிமிடங்கள் மட்டுமே மொத்த படம். அதுவே படத்திற்கு பெரும் பலம்.

விஷ்ணு ஷிர் ஒளிப்பதிவு சிறப்பு. கிரிநந்த், வேத் ஷங்கர், ஜேம்ஸ் வசந்தன் என மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தும் படத்தின் பாடல்கள் சுமாராகவே அமைந்துள்ளது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். காரணம், இப்படத்தின் கதை அப்படி. எமோஷன் காட்சிகளில் நம் எமோஷனை தூண்டும் விதத்திலும், சண்டை காட்சியில் நம் கோபத்தை தூண்டும் விதத்திலும் இசையை அமைத்திருந்தால் இப்படத்தின் தரமே வேறு ரகம்.

அரியவன் – சூரசம்ஹாரம் – (3.25/5)

 

Related post