கிடா மீசை முரட்டுத் தோற்றத்தில் அருள்நிதி!

ஜோதிகா நடித்து வெளியான ராட்சசி படத்தினை இயக்கியவர் தான் கவுதம் ராஜ். இவர் தனது அடுத்த படத்தினை அருள்நிதியை வைத்து இயக்கவிருக்கிறார்.
இந்த படத்திற்காக தனது வழக்கமான தோற்றத்தை விட்டு கிடா மீசையுடனும் முரட்டுத் தோற்றதுடனும் தோன்றவிருக்கிறார்.
இப்படத்திற்கு இமான் இசையமைக்கவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
டி – பிளாக், தேஜாவு, டைரி உள்ளிட்ட படங்கள் அருள்நிதியின் நடிப்பில் உருவாகி வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றன.