அருண்ராஜா காமராஜ் படத்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா..?

 அருண்ராஜா காமராஜ் படத்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா..?

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் “நெஞ்சுக்கு நீதி”. கடந்த வார்ம் வெளிவந்த இப்படம் அனைத்து மக்களாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.

ஆர்டிகல் 15 என்ற படத்தின் ரீமேக்காக வந்தாலும், இயக்குனரின் கைவண்ணம் படத்தில் நன்றாகவே தெரிந்தது.

இந்நிலையில், இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், நமக்கு அதற்கான விடை கிடைத்துள்ளது.

தான் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி, அதை சக்ஸசும் ஆக்கியிருக்கிறார் அருண்ராஜா. இந்த படத்தில் ஹீரோ டாக்டராம். கதை கார்த்திக்கு மிகவும் பிடித்து போக, உடனே படப்பிடிப்பிற்கு போகலாம் என்று கார்த்தி கூறிவிட்டாராம்.

முழுக்க முழுக்க குடும்ப பாங்கான படமாக இப்படம் உருவாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

Related post