அருவா சண்டை விமர்சனம்

 அருவா சண்டை விமர்சனம்

ராஜா, செளந்தர்ராஜா, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, மாளவிகா நடிப்பில் ஆதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “அருவா சண்ட”.

கதைப்படி,

நாயகன் ராஜாவிற்கு சிறு வயதிலிருந்து மிகப்பெரும் கபடி வீரனாக வர வேண்டும் என்று ஆசை. அவரது கனவை நனவாக்க தாயார் சரண்யா பொன்வண்ணன் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.

நண்பர்களோடு சேர்ந்து தனது கிராமத்தில் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த ராஜாவை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் நாயகி மாளவிகா. அதுவரை நட்பாக இருந்த இவர்களின் உறவு காதலாக மாற.

தனது சாதி பெண்ணை வேற்று சாதி வாலிபன் காதலிப்பதை அறிந்து அந்த வாலிபனின் கையை துண்டிக்கிறார் மாளவிகாவின் தந்தையான “ஆடுகளம்” நரேன். அந்த அளவிற்கு தனது சாதியை தூக்கிக் கொண்டு வாழ்பவர் அவர். தனது மாமன் நரேனுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக அரிவாளை தூக்கிக் கொண்டு நிற்பவர் செளந்தர்ராஜா.

கபடி போட்டியில் செளந்தர்ராஜாவின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் ராஜா.

இறுதியின் வேறுவேறு சமுதாயத்தைச் சேர்ந்த ராஜா – மாளவிகா இருவரின் காதல் கைகூடியதா.? சாதிப் பெருமையை தூக்கிச் சுமக்கும் நரேன் மற்றும் செளந்தர்ராஜா திருந்தினார்களா.? என்பதே படத்தின் மீதிக் கதை

நாயகன் ராஜா, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவோடு கொடுத்து அசத்தியிருக்கிறார். கபடி காட்சியில் மிரட்டினாலும், காதல் காட்சியில் ரசிக்க வைக்கவில்லை ஆடியன்ஸை. இன்னும் பயிற்சி வேண்டும்.

நாயகி மாளவிகா, பல இடங்களில் நடிப்பது அப்படியே வெளிச்சமாக தெரிகிறது. அவரின் பாத்திரத்தில் உயிரோட்டம் இல்லையோ என்ற எண்ணம்.

வழக்கம்போல், தனது அனுபவ நடிப்பில் அசரடித்திருக்கிறார் “ஆடுகளம்” நரேன் மற்றும் செளந்தர்ராஜா. தாயாக சரண்யா பொன்வண்ணன், எப்போதும் கொடுக்கும் நடிப்பை தான் இப்படத்திலும் கொடுத்திருக்கிறார்.

இரு பிரிவு சாதி மக்கள், அதில் காதலர்கள், எதிர்ப்பு, காதலனின் லட்சியம், க்ளைமாக்ஸ் என வழக்கமான சாதிய படமாகவே இப்படமும் நகர்ந்து செல்கிறது.

சமூதாயத்தில் ஒரு மாற்றம் தரக்கூடிய ஒரு படமாக அமைந்திருக்க வேண்டிய படத்தில் வழக்கமான ஒரு அடையாளத்தையும் தவறான ஒரு எடுத்துக்காட்டையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதையில் சாற்றி தொய்வு தான். அதை எடிட்டிங்கில் ஒரு பதம் பார்த்திருக்கலாம்.

தரண் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி சூப்பர்.

சந்தோஷ் பாண்டியின் ஒளிப்பதிவில் கபடி போட்டி காட்சிகள் அசத்தல்.

Related post