பூஜையுடன் துவங்கிய ஆர்யாவின் அடுத்த படம்… இயக்குனர் இவரா.?!
கேப்டன் படத்திற்கு பிறகு ஆர்யா தனது 34வது படத்திற்கு இன்று பூஜை போட்டுள்ளார். கேப்டன் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிதான வெற்றி தரவில்லை என்பதால் தனது அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ஆர்யா.
தனது அடுத்த படமான 34 வது படத்தை இயக்குனர் முத்தையா அவர்களிடம் கொடுத்திருக்கிறார் ஆர்யா.. விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கும் படம் இதுவாகும்.
இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க உள்ளார்.
இவர் ஏற்கனவே வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்..
விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
எப்போதும் கமர்சியல் ஹிட் கொடுக்கும் இயக்குனர் முத்தையாவோடு ஆர்யா இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது..