கேப்டனையும் தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட்.. மாஸ் அப்டேட்!

டெடி படத்திற்கு பிறகு ஆர்யாவும் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனும் இணைந்து உருவாகியிருக்கும் படம் “கேப்டன்”. இப்படத்தில் ஐஸ்வர்யலட்சுமி, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக தியேட்டரிக்கல் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
தொடர்ந்து பல பெரிய படங்களை மட்டுமே வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேப்டன் படத்தையும் கைப்பற்றியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. மேலும், இப்படம், வருகிற செப்., 8ல் திரைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.