ஆர்யா நடிக்கும் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”!

 ஆர்யா நடிக்கும் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில், கருப்பு நிற சட்டையும், கருப்பு நிற வேட்டியும் அணிந்து நெற்றியில் திலகமிட்டு சேர் ஒன்றில் அமர்ந்திருக்கிறார் ஆர்யா. அவருக்குப் பின்னால் பாட்ஷா ரஜினியின் உருவம் வரையப்பட்டிருந்தது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த போஸ்டர். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தினை ட்ரம்ஸ்டிக் ப்ரொடக்‌ஷன் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

 

Related post