The elephant whisperers : ஆஸ்கரை தட்டிச் சென்ற ரகுவின் கதை

 The elephant whisperers : ஆஸ்கரை தட்டிச் சென்ற ரகுவின் கதை

சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இந்தியாவின் The elephant whisperers வென்றது. இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் விருதை பெற்றனர்.

யானைகளை பராமரிக்கும் முதுமலையில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய தம்பதி குறித்த இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

தி எலிபன்ட் விஸ்பர்ஸ் ஆவண குறும்படம், முதுமலை தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. அனாதை யானையான ரகுவின் கதை. இந்த யானையை பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினர் பராமரித்து வந்தார்கள்.

இந்த ஆவணபடத்தில் யானை மற்றும் தம்பதியிடையேயான உறவு மற்றும் பாசப்பிணைப்பு மட்டும் படமாக்கப்படவில்லை. சுற்றியிருந்த இயற்கைச்சூழலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப்படம் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நெட்பிளிக்சில் வெளியானது.

பிரபலங்கள் பலரும் இந்த குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Related post