அதோ முகம் விமர்சனம்

 அதோ முகம் விமர்சனம்

இயக்கம்: சுனில் தேவ்

நடிகர்கள்: எஸ்.பி சித்தார்த், சைதன்ய பிரதாப், ஆனந்த் நாக், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின், அருண்பாண்டியன், சரித்திரன்,

ஒளிப்பதிவு: அருண் விஜய்குமார்

இசை: மணிகண்டன் முரளி

பின்னணி இசை: சரண் ராகவன்

தயாரிப்பு: ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ்

கதைப்படி,

நாயகி சைதன்ய பிரதாப் மற்றும் நாயகன் எஸ் பி சித்தார்த் இருவரும் காதல் தம்பதிகள். தனது காதல் மனைவி சைதன்யாவிற்கு திருமண நாளில் சர்ப்ரைஸ் கொடுக்க விரும்புகிறார் சித்தார்த்.

இதற்காக, சைதன்யாப்வின் மொபைல் போனில், ஒரு ஆப்(APP) ஒன்றை இன்ஸ்டால் செய்து அதன் மூலம், மனைவியின் க்யூட்னஸ் வீடியோக்களை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து அதை அவருக்கு பரிசாக கொடுக்கலாம் என்று எண்ணுகிறார் சித்தார்த்.

அதற்காக அந்த APP-ஐ மனைவிக்கே தெரியாமல் அவரது கைபேசியில் இன்ஸ்டால் செய்து விடுகிறார் சித்தார்த். அப்போது அந்த APP மூலம் மனைவியை பார்க்கும் போது அதிர்ச்சி அடைகிறார் சித்தார்த். அதன்பிறகு தொடர்ந்து பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. வாழ்க்கையே இருவருக்கும் மாற அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சித்தார்த் கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். முக பாவனை, உடல் மொழி என இரண்டையும் கதாபாத்திரத்திற்கேற்றவாறு கொடுத்து கதையோடு நாமும் பயணிக்க வைத்திருக்கிறார் சித்தார்த்.

அதுமட்டுமல்லாமல், நாயகியாக நடித்திருக்கிறார் சைதன்ய பிரதாப், தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். பார்ப்பதற்கு அழகாகவும், காட்சிகளில் அளவாகவும் நடித்து கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் சைதன்யா.

அனந்த் நாக், சரித்திரன், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ் என படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் அந்தந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நம்மை படத்தோடு பயணிக்க வைத்திருக்கிறார்கள்.

மறைத்து வைத்திருக்கும் முகம் இதுதான் படத்தின் அதோமுகம் என்பதின் விரிவாக்கம். கைபேசி வாயிலாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் முகம் என்ன என்பதை மிகவும் த்ரில்லரோடு அடுத்தடுத்த காட்சிகளில் படபடப்போடும் நகர வைத்து சீட்டின் நுனியில் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர்.

பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது.

அதோமுகம் – திருப்பங்கள் நிறைந்த த்ரில்லர். –  3/5

Related post