ஆண் குழந்தைக்கு பெற்றோரான அட்லீ & ப்ரியா!

 ஆண் குழந்தைக்கு பெற்றோரான அட்லீ & ப்ரியா!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார் இயக்குனர் அட்லீ.

தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, பிகில் மற்றும் மெர்சல் உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கினார். இந்நிலையில், அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் நடிகை ப்ரியாவுடன் திருமணம் நடந்திருந்த நிலையில், நேற்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை அட்லீ தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார்.

சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தம்பதிகளுக்கு தெரிவித்து வருகின்றனர்.

 

Related post