ஷாருக்கானை அடுத்து சல்மான்கான்… அட்லீயின் அடுத்த அதிரடி!!

 ஷாருக்கானை அடுத்து சல்மான்கான்… அட்லீயின் அடுத்த அதிரடி!!

தளபதி விஜய்யின் பிகில் படத்தை தொடர்ந்து இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது, சல்மான்கானை நேரில் சந்தித்த அட்லீ, அவரிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்…

அந்த கதை, சல்மான்கானுக்கு மிகவும் பிடித்துபோக உடனே ஓகே சொல்லிவிட்டாராம்… ஜவான் படத்தை முடித்து அடுத்ததாக சல்மான்கான் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் அட்லீ.

அதன்பிறகே தளபதி விஜய்யின் படத்தை இயக்கவுள்ளாராம் அட்லீ.

 

Related post