என்னை தவறாக சித்தரிக்கிறீர்கள் – கமலிடம் சீரிய ஆயிஷா;

 என்னை தவறாக சித்தரிக்கிறீர்கள் – கமலிடம் சீரிய ஆயிஷா;

நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலகநாயகன் கமல் ஹாசன். வீட்டிலிருந்த பல ஹவுஸ்சமேட்ஸை வெளுத்து வாங்கினார். குறிப்பாக அசீம் மற்றும் ஷெரினா ஆகியோரை கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் வந்தார் கமல்.

குறும்படம் போட்டபின், ஆயிஷாவிடம் யார் யாரை தள்ளியது என்று கேட்டார் கமல். அதற்கு, எதுவும் புரியவில்லை என்று பதில் பேசி தப்பித்துவிட்டார் ஆயிஷா.

அதன்பின், இடைவேளையின் போது எதற்காக கமல் சார் என்னை குறிப்பிட்டு கேட்டார்? நான் என்ன செய்தேன் என்று ஒன்னும் தெரியாதது போல் ஹவுஸ்சமேட்ஸிடம் சீன் போட்டு வந்தார் ஆயிஷா.

இன்றைய தினம் ஒளிபரப்பப்படவுள்ள எபிசோடில். மலையாளம் பேசுவது குறித்தும். மைக் மாட்டாமல் ரகசியம் பேசுவது குறித்தும் விசாரித்து வந்த கமலிடம் “நீங்கள் என்னை தவறாக சித்தரிக்கிறீர்கள்” என்று வினா எழுப்பியுள்ளார் ஆயிஷா. அதற்கு கமலும் சிரித்தார். மக்களும் கரகோஷங்கள் எழுப்பினர்.

மேலும், இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில். ரச்சிதாவின் பொம்மையை என் வெளியேற்றினர் என்று ஆயிஷாவிடம் கமல் விசாரிக்க. அசீம் தான் எனக்கு ரச்சிதாவின் பொம்மையை கொடுத்தார் என்றார் ஆயிஷா. அதற்கு, கமலும் “அசீமின் திட்டத்திற்கு நீங்கள் துணையாக செயல்பட்டுள்ளீர்கள்” என்றபோது அசீமுக்கும், ஆயிஷாவுக்கும் முகமே வாடியது.

ஆயிஷா கேள்வி எழுப்பியதற்கு அசீம் தான் காரணம்:

நேற்று, கமல் ஹாசன் பேசிவிட்டு சென்றதன் பிறகு. டைனிங் ஏரியாவில் அசல், அசீம், மைனா, ராபர்ட் மாஸ்டர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது. “வெளியில் என்னை எப்படி சித்தரிக்கிறார்கள் என்று தெரியவில்லை, நான் கோபப்பட்டதற்கு முன்-பின் என இரண்டு இருக்கும் அதைவிட்டு விட்டு நடுவில் இருப்பதை மட்டுமே காட்டுகிறார்கள்” என்று அசீம் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அசல், “இதற்காக தான் கட், என்று ஒரு விஷயம் இருக்கிறது” என்றார்.

ஒரு வேலை அசீமின் பேச்சால் ஆயிஷா கமலிடம் சீறியிருப்பாரோ? அப்படி சீறியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று மக்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Related post