விஜயகாந்த் குணமடைய சபரிமலையில் தரிசனம்!!

 விஜயகாந்த் குணமடைய சபரிமலையில் தரிசனம்!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதனால், அவர் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

சில தினங்களாக நடிகர்கள் அஜித் நடிக்கும் துணிவு மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு படங்கள் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் ரசிகர்கள் பட போஸ்டர் உடன் சபரிமலையில் பிரார்த்தனை செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜயகாந்த் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் வைத்து பிரார்த்தனை செய்துள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Related post