Baaram திரைப்படம் விமர்சனம்

 Baaram திரைப்படம் விமர்சனம்

பாரம் : தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படம் ஒருவழியாக இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பது இன்னும் கூடுதலான தகவல். படத்தின் கதை, கிராமத்தில் தனது தங்கை குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் 65 வயதான முதியவர் ஒரு கட்டத்தில் அவருக்கு விபத்தில் அடிபட்டு இடுப்புஎலும்பு உடைந்து படுத்தப்படுக்கையாகிறார். அவருடைய சொந்த மகன் அவரை குணமாக்க அதிக செலவாகும் என்று கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று படுத்த படுக்கையில் போடுகிறார். ஒரு நாள் அவர் தூக்கத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி அவரது தங்கை குடும்பத்திற்கு வந்தடைகிறது,அவரது தங்கை மகன் இது இயற்கை மரணமா இல்லை கொலையா என ஆராயும் போது கிடைக்கும் தகவல்கள் மீதி கதை.

படத்தின் நாயகன் நாயகி என்று தனி தனியாக ஒருத்தரை காட்ட முடியாது,படத்தில் நடித்துள்ள அத்தனை பேரின் நடிப்பிலும் அவ்வளவு உயிரோட்டம் இருக்கிறது. அத்தனை நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு படமெங்கும் தெரிகிறது. தலை குத்தல் என்னும் பாரம்பரிய வழக்கம் இன்னும் சில கிராமம்களில் இருந்து வருவதை இந்த படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பிரியா கிருஷ்ணஸ்வாமி. அவருக்கு மிக பெரிய பாராட்டுக்கள்.

Related post