பாபா ரீ-ரிலீஸ்… கோடியை தொட்ட முதல்நாள் வசூல்!

 பாபா ரீ-ரிலீஸ்… கோடியை தொட்ட முதல்நாள் வசூல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “பாபா”.

20 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, நேற்று உலகம் முழுவது ரிலீஸ் செய்யப்பட்டது. நாளைய தினம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

பல திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இதை பெரிதாக கொண்டாடினர்.

படம் வெளியாகி

தமிழ்நாட்டில் – ரூ. 80 லட்சமும்
கர்நாடகாவில் – ரூ. 7.5 லட்சமும்
ஓவர்சீஸில் – ரூ. 50 லட்சமும்

மொத்தமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 1.4 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெளியாகியிருக்கும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Related post