பகாசூரன் விமர்சனம்

 பகாசூரன் விமர்சனம்

செல்வராகவன், நட்டி, ராதா ரவி, கே.ராஜன் மற்றும் பலர் நடிப்பில், மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பகாசூரன்”.

எதை பேசுகிறது இப்படம்?

கல்லூரியில் படிக்கும் அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி. அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகும் கல்லூரி நிர்வாகிகளை ஜராசந்தன், சடாசுரன், கீசகன் போன்ற அரக்கர்களை பீமன் வதம் செய்தது போல் மகாபாரதம் பாணியில் பழி வாங்கும் ஒரு தகப்பனின் கதையை தான் பேசுகிறது இப்படம்.

இப்படி பட்ட சில நிகழ்வுகளும், தவறுகளும் நடக்க காரணமாக இருப்பது மொபைல் போன்கள் தான் என்பதையும் சேர்த்து சொல்கிறது.

கதைப்படி,

ஏற்காடு பகுதியில் ரிடைரான மிலிட்டரி ஆபிஸராக வருகிறார் நட்ராஜ். அவரின் அண்ணன் மகள் திடீரென தற்கொலை செய்துகொள்கிறார். அவரின் போன் நட்ராஜின் கைக்கு வர. அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாலும் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தற்கொலை செய்துகொண்டதும் நட்ராஜுக்கு தெரியவருகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஒரு சிலரை கொடூரமாக கொலை செய்து வருகிறார் செல்வராகவன்.

செல்வராகவன் எதற்காக கொலை செய்கிறார்? குற்றவாளிகளை கண்டு பிடித்தாரா நட்ராஜ்?

பீஸ்ட், சாணிகாயிதம் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை பெற்ற செல்வராகவன் இப்படத்தில் மிகவும் ஆர்டிபிஷியலாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இது போதுமோ என்று அவர் நினைத்தாரோ என்று அவருக்கு தான் தெரியும்.

கர்ணன் படத்தில் மிரட்டியிருக்கும் நட்டியும் இப்படத்தில் அளவான நடிப்பையே கொடுத்துள்ளார்.

எமோஷனல் காட்சிகளில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம்.

வழக்கம் போல் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை சொல்லி படம் எடுக்கலாம். ஆதிபராசக்தியின் போட்டோ, குறிப்பிட்ட நபரின் பெயர், குறிப்பிட்ட ஊர் என குறியீடுகளை வைத்து படமாக்கியிருக்கிறார் மோகன்.ஜி.

திரௌபதி, ருட்ரதாண்டவம் படங்கள் விமர்சனத்தில் சிக்கினாலும். திரைக்கதை வலுவாக இருந்ததால் பாராட்டுகளை பெற்றது. இப்படம் பாராட்டுகளை குவிக்குமா என்று கேட்டல் அது சந்தேகமே.

ஆனால், மகாபாரதத்தை உள்ளே திணித்து தான் ஒரு கட்சி சார்ந்த பின்புலத்தோடு படம் எடுக்கிறேன் என்பதை நிரூபித்துள்ளார் மோகன்.ஜி

ஸ்டாண்ட் காட்சிகள் ரசிக்கும் வகையிலும் யதார்த்தமாகவும் இருந்தது.

சாம்.சி.எஸ் இசை நன்றாக இருந்தாலும் படத்தில் ஒட்டவில்லை.

பகாசூரன் – வதமா? பகையா?

Related post