பயமறியா பிரம்மை விமர்சனம் 2/5

 பயமறியா பிரம்மை விமர்சனம் 2/5

இயக்கம்: ராகுல் கபாலி

நடிகர்கள்: ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரீஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ்

ஒளிப்பதிவு: நந்தா மற்றும் பிரவீன்

இசை: கே

தயாரிப்பு: 69 எம் எம் பிலிம்ஸ்

கதைப்படி,

25 ஆண்டுகளில் சுமார் 96 கொலைகளை செய்து சிறை தண்டனை அனுபவித்து வருபவர் தான் ஜெகதீஷ். கொலை செய்வதையே கலையாக கொண்ட இவரின் வாழ்க்கையை புத்தமாக எழுத நினைக்கிறார் வினோத் சாகர்.

ஜெகதீஷை நேரில் சந்தித்து அவரின் முதல் கொலையில் ஆரம்பித்து அவர் செய்த கொலைகள் பற்றி அவர் கூறியதை எழுதுகிறார் வினோத் சாகர்.

ஜெகதீஷுக்கு கொலை செய்யும் மனப்பான்மை எப்படி வந்தது.? ஜெகதீஷின் வாழ்க்கையை வினோத் சாகர் எப்படி புரிந்து கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

கொலையை கலையாக செய்து வரும் ஒரு நபரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். இதுவரை வெளிவந்த படங்களில் இப்படம் சற்று வித்தியாசமாக இருந்தாலும், இந்த கதை எது நோக்கி தான் செல்கிறது என்ற குழப்பம் படம் பார்ப்பவர்களின் மத்தியில் எழுகிறது.

கதையை இன்னும் எளிமையாக அனைத்து ரசிகர்களும் எளிதில் புரியும்படியாக நகர்த்தி சென்றிருக்கலாம்.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள். மேலும், பின்னணி இசை படத்திற்கு பலமாக நிற்கிறது.

ஒளிப்பதிவில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

பயமறியா பிரம்மை – சலிப்பு

Related post