ஹாரிபாட்டர் பட நடிகர் திடீர் மரணம்; வருத்தத்தில் ரசிகர்கள்!!

 ஹாரிபாட்டர் பட நடிகர் திடீர் மரணம்; வருத்தத்தில் ரசிகர்கள்!!

பிரபல ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தில் நடித்த நடிகர் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது மரணம் அனைவரையும் சோகத்தில் மூழ்க செய்துள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராபி கோல்ட்ரேன் (வயது 72). இவர் தி வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் குழந்தைகள் மட்டுமல்லாது பல ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

 

Related post