பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு 1000 கோடி சம்பளம்.?

மிகவும் பிரபல நிகழ்ச்சியாக இந்தியா முழுவதும் வலம் வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இந்தியில் 15 சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடைசி சீசனை தொகுத்து வழங்கியிருந்தார் நடிகர் சல்மான் கான். பாலிவுட்டில் பல கோடிகளை குவிக்கும் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கென ஒரு நடிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்க பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
தனது மார்க்கெட்டின் நிலவரத்தை கருத்தில் கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் தனக்கு வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சல்மான்கான். அதாவது சுமார் 1000 கோடி வரை தனக்கு சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம் சல்மான் கான்.
நிகழ்ச்சியின் தயாரிப்பு தரப்பும் கேட்கும் சம்பளத்தை தருவதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1000 கோடியப்பு…