பிக் பாஸ் வீட்டில் இதுவே முதல் முறை; யாரும் செய்யாததை செய்த போட்டியாளர்;

 பிக் பாஸ் வீட்டில் இதுவே முதல் முறை; யாரும் செய்யாததை செய்த போட்டியாளர்;

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 11 வது வாரம் தொடங்கியுள்ளது. இப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்டத்தை பிக் பாஸ் வீடு நெருங்கியுள்ளதால், இதுவரை நாமினேட் ஆகாத ஷிவின் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளார். மேலும் விக்ரமன், அசீம், ரக்ஷிதா, தனலட்சுமி, கதிரவன், “மைனா” நந்தினி ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்சமாக மூன்று முறை தான் கேப்டன் பதவியை சினேகன் மற்றும் யாஷிகா தக்க வைத்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் “மைனா” நந்தினி மூன்று முறை கேப்டனாக இருந்துள்ளார்.

இவர்களின் சாதனையை முறியடிக்கும் வகையில் பிக் பாஸ் வரலாற்றிலேயே நான்காவது முறையாக கேப்டன் பதவியை ஏற்றுள்ளார் மணிகண்டன். இந்த வாரமும் இவர் எவிக்ஷனில் இருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த வாரம் நாமினேஷனில் மணிகண்டன் இடம்பெற்றால் பிக் பாஸ் வீட்டை விட்டு போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பிக் பாஸ் சீசன் 11 வது வார தலைவராக மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகையால், இந்த வார எவிக்ஷனில் இருந்தும் மணிகண்டன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Related post