இந்த வார ஏவிக்க்ஷன்; வீட்டை விட்டு வெளியேறிய கோளாறான நபர்; அசீமை காப்பாற்றியது ஏன்?

 இந்த வார ஏவிக்க்ஷன்; வீட்டை விட்டு வெளியேறிய கோளாறான நபர்; அசீமை காப்பாற்றியது ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானா நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

அசீம், VJ மஹேஸ்வரி , இன்ஸ்டாகிராம் புகழ் தனலட்சுமி, ADK, அசல் கோலார், ஜனனி, என பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில். முதல் நாள் முதலே கடும் வாக்குவாதமும் மனஸ்தாபமும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் ஜனனி, ரட்சித்தா, ADK, அசல் கோலார், VJ மஹேஸ்வரி, ஆயிஷா, அசீம் என 7 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்ற வாரம் நடந்த நாமினேஷனில் கடைசியாக காப்பாற்றப்பட்ட நபர் VJ மஹேஸ்வரி. வீட்டை விட்டு வெளியேறியது சாந்தி. அப்போதே, கடைசியாக என்னை காப்பாற்றியுள்ளனர் என்று புலம்பி தீர்த்தார் VJ மஹேஸ்வரி. அதையே காரணமாக வைத்து, அவரை ஹவுஸ்சமேட்ஸ் இந்த வாரமும் நாமினேட் செய்தனர்.

இந்த வாரமும் அவரை தான் கடைசி ஆளாக காப்பாற்றியுள்ளனர் மக்கள். அதற்காக, இன்றும் VJ மஹேஸ்வரி எல்லா தப்பும் செய்தது அசீம் தான். அவரை முதலில் காப்பாற்றிய மக்கள் என்னை ஏன் கடைசியாக காப்பாற்ற வேண்டும் என்று சோக கீதம் பாடியதாக தெரிகிறது.

மக்கள் தீர்ப்பு:

அசீம் பலரிடம் மரியாதை குறைவாகவும், ஹவுஸ்சமேட்ஸை அசிங்கப்படுத்தும் விதத்திலும் வன்மத்தை கக்கி வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரை வெளியேற்றாமல் அசல் கோலாரை வெளியேற்றியது ஏன்?

முதல் 4 நாட்கள் பெண்களிடமும் ஹவுஸ்சமேட்களிடமும் கெத்து காட்டி வந்த கோலார். திடீரென விஸ்வரூபம் எடுத்து போல் பெண்களிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கிவிட்டார். குயின்ஸீயின் கை முட்டியைத் தடவுவது. நிவா-வை கட்டி பிடிப்பது. நிவா-வை கடிப்பது. VJ மஹேஸ்வரியின் கால்களை தடவிக்கொடுப்பது. போன்று பல அநாகரீக செயல்களை செய்துவந்தார் அசல் கோலார்.

இதற்காக, நெட்டிசன்களும் கமெண்ட்களும் அனல் பறக்க இணையத்தளம் முழுவதும் பரவி வந்தது. இச்செயலை எப்படி குழந்தைகளுடன் பார்க்க முடியும்? என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வந்த நிலையில். மக்களே இவரின் செயலுக்கு பதில் கண்டுள்ளனர். அதனால் தான், இந்த வாரம் சில்மிஷம் செய்துக் கொண்டிருந்த “அசல் கோலார்” வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும், அசீமின் இந்த செயலுக்கு அடுத்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

Related post