அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி!?

 அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நாயகி!?

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தனது 62வது படமான “விடா முயற்சி” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று இந்த அறிவிப்பு வெளியானது. படத்தின் டைட்டில் பல விவாதத்திற்கு உள்ளானாலும், அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடித் தான் வருகின்றனர்.

இந்நிலையில், அஜித்திற்கு ஜோடி தேடும் படலத்தில் தற்போது இயக்குனர் மும்முரமாக இருந்து வருகிறார். அதன் வரிசையில், தற்போது கங்கனா ரனாவத், கேத்ரினா கைஃப், கரீனா கபூர் இந்த மூவரில் ஒருவரைத் தான் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம் இயக்குனர்.

விரைவில், நாயகியை உறுதி செய்த பின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறதாம்.

படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். தயாரிக்கிறது லைகா நிறுவனம்.

Related post