அது உண்மையல்ல.. துணிவு பட தயாரிப்பாளர் ட்விட் பதிவு!!

 அது உண்மையல்ல.. துணிவு பட தயாரிப்பாளர் ட்விட் பதிவு!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் லவ் டுடே. வெறும் 8 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் மட்டுமே சுமார் 90 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.

இப்படம் தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்ய பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும், அதில் வருண் தவான் நாயகனாக நடிக்க, பிரதீப்பே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதை மறுத்துள்ளார் போனி கபூர். தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “’லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. இதை யாரும் நம்ப வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.

 

Related post