பதான் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான்.
சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ஒன்றில், அரைகுறை ஆடையுடன் தீபிகா படுகோன் ஆடிய நடனம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், அந்த நடனத்தில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக அணிந்த ஆடையானது, காவி நிறத்தில் இருந்தது என்பது தான்.
வட மாநிலங்களில் இதற்காக கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இப்படத்தின் போஸ்டர்கள் ஆங்காங்கே கிழிக்கவும் தொடங்கினர் வட மாநிலத்தவர்கள் சிலர்.
இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், நேற்றிரவும் இப்படத்தின் போஸ்டர் கிழிக்கப்பட்டது.
முட்டாள்கள் சிலர் செய்யும் வேலை இது என்று பலரும் கூறி வருகின்றனர்.